தமிழ்நாடு

tamil nadu

அயோத்தி தீர்ப்பு இருதரப்புக்கும் வெற்றியே...!

By

Published : Nov 9, 2019, 8:56 PM IST

Updated : Nov 10, 2019, 12:53 PM IST

டெல்லி: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பி.ஹெச்.டி. சேம்பர் தலைவர் டி.கே. அகர்வால் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

anand mahindra view

நாடே பெரிதும் எதிர்பார்த்த அயோத்தியின் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று அளித்துள்ளது. அதில், "சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம். அதற்காக மத்திய அரசு மூன்று மாதத்தில் அயோத்தி அறக்கட்டளையை உருவாக்க வேண்டும். மேலும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டுவதற்கு அயோத்தியிலேயே ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும்" என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அந்தவகையில், தொழிலதிபர் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், "1.3 பில்லியன் மக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் வழங்கியுள்ளனர். இந்தத் தீர்ப்பை வழங்குவதற்கு அந்த ஐந்த நீதிபதிகளுக்கு அசாதாரண தைரியம். நீதியை நிலைநாட்டிய அந்த ஐந்து பேருக்கு எனது சல்யூட்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஐந்து நீதிபதிகளின் அசாதாரண தெரியத்துக்கு நான் மரியாதை தெரிவிக்கிறேன்- ஆனந்த் மஹிந்திரா

ஐந்து நீதிபதிகளின் அசாதாரண தெரியத்திற்க்கு நான் வணக்கம் தெரிவிக்கிறேன். 1.3 பில்லியன் மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த தீர்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. நாட்டில் நீதியை நிலை நாட்டியத்திற்கு ஐந்து நீதிபதிகளுக்கு மரியாதை தெரிவிக்கிறேன் என பதிவிட்டியுள்ளார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

  • உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பால் நீண்ட நாள்களாக நீடித்துவந்த சட்ட சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

  • ஒவ்வொருவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும்.

இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு நிர்வாக இயக்குநர் அவஸ்தி

  • நாட்டின் அமைதியை பாதுகாக்க சர்ச்சைக்குரிய நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்கும் மாற்று இடத்தில் ஐந்து ஏக்கர் பகுதியில் மசூதி கட்டுவதற்கும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது.


பி.ஹெச்.டி. சேம்பர் (PHD Chamber) தலைவர் டி.கே. அகர்வால்

  • இந்தத் தீர்ப்பு இருதரப்புக்கும் வெற்றியே!


இதையும் படிங்க: அயோத்தி தீர்ப்பு யாருடைய வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல - பிரதமர் மோடி

Last Updated : Nov 10, 2019, 12:53 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details