தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை தடை செய்ய எந்த தேவையும் இல்லை: அமெரிக்கா

வாஷிங்டன்: போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை தடைசெய்ய எந்தத் தேவையும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

By

Published : Mar 13, 2019, 2:52 PM IST

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் 'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானம் சில நாட்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளானது. இதில், 157 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, அந்த போயிங் ரக விமானத்தின் பாதுகாப்பு கேள்விக் குறியானதால், இந்தியா, சீனா, இந்தோனேசிய நாடுகள் அவற்றின் போக்குவரத்தை தங்கள் நாடுகளில் ரத்துசெய்தது.

இதுகுறித்து அமெரிக்கா விமான போக்குவரத்து இயக்குநரகம் கூறுகையில், 'சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விபத்துக்கு, போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தின் பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாகத் தெரியவில்லை.

boeing 737 max flight


அதேபோல், தொழிற்நுட்பக் கோளாறுகளோ, பாதுகாப்பு சம்பந்தமான கோளாறுகளோ விமானத்தில் இருப்பதாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவில்லை' என தெரிவித்துள்ளது.

2018 அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் லையன் ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details