தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 8, 2020, 3:01 AM IST

ETV Bharat / bharat

அமைதியை நிலைநாட்ட உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் வழிவகுக்கும் - ராஜ்நாத் சிங்

டெல்லி: ஏரோ இந்தியா 2021இல் கலந்துகொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைதியை நிலைநாட்ட சுயசார்பு கொள்கையும் உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்களும் வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.

Rajnath
Rajnath

ஏரோ இந்தியா 2020 தூதர்களின் வட்ட மேஜை மாநாட்டில் காணொலி மூலம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது. அமைதியை நிலைநாட்ட சுயசார்பு கொள்கையும் உள்நாட்டுப் பாதுகாப்புத் தளவாடங்களும் வழிவகுக்கும்.

விண்வெளித் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் இந்தியா வளர்ச்சியை கண்டுள்ளது. நட்பு நாடுகளின் கூட்டணியில் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்களை இந்தியாவில் அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.

இங்கு தயாரிக்கப்படும் ஆயுதங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும். ஏரோ இந்தியா 2021 மூலம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களை விற்று முதலாக ஈட்ட திட்டமிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டிற்குள் விண்வெளித் துறை மற்றும் பாதுகாப்பு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்ட திட்டமிட்டுள்ளோம்.

பாதுகாப்புத் துறையில் உலகின் தலைசிறந்த ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். சுயசார்பு கொள்கையின் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவன முதலீடுகளை கொண்டு இது நிறைவேற்றப்படும்" என்றார்

இதையும் படிங்க:சிறிய ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்க பாதுகாப்புத் துறை திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details