ஐநா சபையின் இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் ஒரு அமைப்பான மகளிர் நிலை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா வெற்றி பெற்றது. பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
இது பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நாட்டின் எங்களது அனைத்து முயற்சிகளின் உறுதிப்பாட்டு மற்றும் ஒப்புதல். இந்தியா வெற்றி பெற உதவிய உறுப்பு நாடுகளின் ஆதரவுக்கு நன்றி.” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கான தேர்தலில் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் போட்டியிட்டன. இதில், சீனாவால் பாதி வாக்குகள் கூட பெறவில்லை.
2021 முதல் 2025ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளுக்கு இந்தியா பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும்.
இந்த ஆண்டு பிரபலமான பெய்ஜிங் பெண்கள் மாநாட்டின் (1995) 25ஆவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.