தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குல்பூஷன் ஜாதவை சந்திக்க பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் - இந்தியா

டெல்லி: பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட குல்பூஷன் ஜாதவை தூதரக அலுவலர்கள் சந்திக்க அனுமதியளிக்க வேண்டும் என்று இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

Kulbhushan Jadhav
Kulbhushan Jadhav

By

Published : Jul 16, 2020, 4:41 PM IST

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட குல்பூஷன் ஜாதவுக்கு அந்நாட்டின் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தொடர்ந்த வழக்கில், மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டது.

மேலும், வழக்கை மறுபரிசீலனை செய்யவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் குல்பூஷன் ஜாதவ், தனது மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்டதாகவும், அதற்கு பதிலாக கருணை மனு தாக்கல் செய்ய விரும்புவதாகவும் பாகிஸ்தான் கடந்த சில நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தது.

ஆனால், மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய குல்பூஷன் மறுக்கவில்லை என்றும், அவர் கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் இந்தியா கூறியிருந்தது.

இந்நிலையில், குல்பூஷன் ஜாதவை எவ்வித நிபந்தனையுமின்றி இந்திய தூதரக அலுவலர்கள் சந்திக்க பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈரான் வழியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்து உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் இந்தியக் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவிற்கு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில இந்தியா வழக்குத் தொடர்ந்தது.

சுமார் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு தடை விதித்த சர்வதேச நீதிமன்றம், தண்டனையைப் பாகிஸ்தான் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

மேலும், குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அலுவலர்கள் சந்திக்க அனுமதி அளிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்கும் குறைவாக சேவையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம்

ABOUT THE AUTHOR

...view details