பெரும்பான்மை பலம் இல்லாத காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி அரசு ஆட்சியை தக்கவைப்பதற்காக, சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர் நாகேஷுக்கு அமைச்சர் பதவி வழங்கியது. கடந்த மூன்று நாட்களாக காங்கிரஸ் - மதச்சார்பற்ற கட்சிகளின் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர்.
சுயேச்சை எம்.எல்.ஏ ராஜினாமா; பாஜகவுக்கு ஆதரவு! - சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர் நாகேஷ்
பெங்களூரு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர் நாகேஷ், ராஜினாமா செய்த மற்ற உறுப்பினர்களை சந்திக்க மும்பை விரைந்துள்ளார்.

சுயேச்சை எம்.எல்.ஏ ராஜினாமா
இதனைத் தொடர்ந்து சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர் நாகேஷ், தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். பின், பாஜகவுக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவுக்கு கடிதம் அளித்துள்ளார்.
இதையடுத்து, ராஜினாமா செய்த மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களை பார்க்க தனி விமானம் மூலம் மும்பை சென்றுள்ளார்.