நாட்டில் அனைத்து பண பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. குறிப்பாக, அனைத்து தனியார் வங்கிகளும் டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனைகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றன.
வருமானவரி செலுத்துவோர் கவனத்திற்கு: இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்!
டெல்லி: வருமானவரி செலுத்துபவர்கள் இனி ஆன்லைனிலேயே தங்களின் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, ஆன்லைனிலேயே அதனை சமர்ப்பிக்கலாம் என வருமானவரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பம்
அதன் தொடர்ச்சியாக, வருமான வரி செலுத்துவோருக்கான விண்ணப்பங்கள் இனி ஆன்லைனில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துபவர்கள் இனி இணையத்திலேயே தங்களின் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ஆன்லைனிலேயே சமர்ப்பிக்கும் புது வசதியை வருமானவரித் துறை அறிமுகம் செய்துள்ளது.
மேலும், இந்த விண்ணப்பம் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.incometaxindiaefiling.gov.in என்ற இணைய பக்கத்தில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.