தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2020, 8:10 PM IST

ETV Bharat / bharat

'புதுச்சேரியில் மது கடைகள் விரைவில் திறக்கப்படும்' - முதலமைச்சர் அறிவிப்பு!

புதுச்சேரியிலும் மது கடைகளைத் திறப்பதற்கான முடிவை விரைவில் அறிவிப்போம் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மதுக்கடைகள் விரைவில் திறக்கப்படும் -முதலமைச்சர் அறிவிப்பு!
புதுச்சேரியில் மதுக்கடைகள் விரைவில் திறக்கப்படும் -முதலமைச்சர் அறிவிப்பு!

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'புதுச்சேரியிலும் மது கடைகளைத் திறக்க விரைவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மது கடைகளைத் திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும். இதற்காக அமைச்சரவையைக் கூட்டி முடிவை மிக விரைவில் அறிவிப்போம்.

தமிழ்நாடும் புதுச்சேரியும் அருகாமையில் உள்ள மாநிலங்கள், இடையில் மாறி மாறி மாநிலங்கள் வரும். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் மக்கள் புதுச்சேரி மாநில எல்லையான முத்தியால்பேட்டையில் தடுத்து நிறுத்தப்படுவது சரியாக இருக்காது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுக்குப் பின் கடைகளில் கடந்த இரண்டு தினங்களாக இருந்த கூட்டம் தற்போது இல்லை. ஆனால், மக்கள் நடமாட்டம் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நேரம் மாற்றம் செய்யப்படுவதற்கான முடிவு எடுக்கப்படவுள்ளது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...விபத்து ஏற்பட்ட விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை யாருடையது?

ABOUT THE AUTHOR

...view details