அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) அதிகாலையில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில், 62 வயதான ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை செய்தது ஈரானை கோபமடையச் செய்தாலும், அதில் உடனடியாக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பில்லை.
சுலைமானி, தாம் கொல்லப்படலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்பு படையின் (ஐ.ஆர்.ஜி.சி) வெளிப்புறக் குழுவான அல்-குட்ஸ் படையின் தளபதியாக பொறுப்பேற்றதில் இருந்தே, அவருக்குப் பல நெருக்கடிகள் இருந்தன. அவர், தன்னை எதிர்த்து போராடுபவர்களிடம் இருந்தே எதிர்ப்பு சக்தியை அனுபவிப்பதாகத் தோன்றியது.
'ஆபரேஷன் பாலைவனப் புயல்' என்ற நடவடிக்கைக்குப் பிறகு, ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவால் அவர் ஏன் தாக்கப்படவில்லை என்பதற்கு சில காரணங்கள் இருந்தன. சுலைமானியின் படுகொலைக்கான உண்மையான காரணத்தை அறிய இன்னும் சில காலம் ஆகும். அதே நேரத்தில், அவரது மரணம் பல நாடுகளுடன் ஈரான் உருவாக்கிய நிதி உறவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்தப் படுகொலைக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு ஒரு பெரும் குழப்பம் உள்ளது. ஏனெனில், ஈரானை பிராந்திய நண்பராக இந்தியா கருதுகிறது. அந்த நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் மக்ரான் கடற்கரையில் அமைந்துள்ள சபாஹரின் வளர்ச்சிக்கு கணிசமான நிதியை முதலீடு செய்ய இந்தியா முயல்கிறது.
ஈரானையோ, அமெரிக்காவையோ பகைத்துக் கொள்ள விரும்பாதா இந்தியா, கத்தி மேல் நடப்பது போல் ஈரானிய படைத்தளபதியின் மரணத்திற்கு வாய் திறக்காமல் கண்டனம் தெரிவிக்காமல், மாறாக இந்தியாவின் ஆர்வம் அவர் படுகொலைச் செய்யப்பட்டதன் காரணத்தை அறிந்து கொள்வதில்தான் இருந்தது.
இது அமெரிக்காவை மகிழ்ச்சியடையச் செய்யலாம்; ஆனால் இது தெஹ்ரானுக்கு ஆதரவானதாக இருக்காது. இது சபாஹரில் உள்ள ஷாஹித் பெஹெஸ்டி துறைமுகத்தை 10 ஆண்டுகள் நிர்வாக குத்தகைக்கு வழங்கும் வாய்ப்பைக் குறைத்துள்ளது.
பாகிஸ்தானின் பலுச்சி துறைமுகமான குவாடரில் அதிக முதலீடு செய்துள்ள சீனா, சபாஹரிலும் துறைமுகம் கட்டுவதில் ஆர்வமாக இருந்தது; ஆனால் இப்பணியை இந்தியாவுக்குக் கொடுக்க ஈரானுக்குச் சில காரணங்கள் இருந்தன. ஓமன் கடலில் அமைந்துள்ள ஈரானிய துறைமுகம்தான் இந்தியாவின் முதல் வெளிநாட்டு முதலீடாகும். இது பாகிஸ்தானை ஓரங்கட்ட உதவுகிறது; மத்திய ஆசியாவுடன் தனது நில வழியை மீண்டும் உருவாக்க இந்தியாவுக்கு உதவுகிறது.
அல்-பெரூனியின் பயணக் கட்டுரைகளில் சபாஹர் துறைமுகம்தான் இந்துஸ்தானின் தொடக்கப் புள்ளியாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்தத் துறைமுக நகரத்தில் இந்தியாவின் முதலீடு என்பது இயற்கையான ஒன்றாகவே கருதப்படுகிறது. சபாஹருக்குப் பயணம் செய்தபோது, அந்த எழுத்தாளர் இந்துஸ்தானி மொழியை எளிதில் பேசுவதையும், இந்தியா பயணத்தில் மகிழ்ச்சியாக இருப்பதையும் கண்டார்.
ஈரானிய தூதர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலேயே இந்தியா தனது இருப்பை உருவாக்க விரும்புவதற்கு எந்தவொரு மறுப்பையும் குறிப்பிடவில்லை. பாகிஸ்தான் அரசால் உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட இந்தியரான குல்பூஷன் ஜாதவ், சபாஹரிலிருந்து தான் அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சபாஹர் திட்டத்திற்கு இரு முக்கியமான விஷயங்கள் உள்ளன; துறைமுக சாலையும் மற்றும் ரயில் நெட்வொர்க்கும்தான் அது. துறைமுக சாலை ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள நகரங்களுடன் இணைகின்றன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஆகியோர் 2016ஆம் ஆண்டில் கையெழுத்திட்டனர்.
இந்த P5 + 1 நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தம், தெஹ்ரானை சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடன் வணிகம் மற்றும் வியாபாரத்தை எளிதாக மேற்கொள்ள, சர்வதேச வங்கியை அணுக அனுமதிக்கிறது.