இதுகுறித்துப் பேசிய அவர், ”இந்த கரோனா ஊரடங்கு காலத்தில், பல்வேறு மாநிலங்கள் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. உ.பியின் வளமாக உள்ள இந்த தொழிலாளர்களுக்கென தனி ஆணையம் அமைக்கப்பட இருக்கிறது.
பல்வேறு மாநிலங்களிலிருந்து திரும்பிய குடிபெயர்ந்த தொழிலாளர்களின் தகவல், திறன்கள் பதிவு செய்யப்படும். அவர்களுக்காக அமைக்கப்படும் ஆணையம் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், சுரண்டலைத் தடுக்க சட்ட உதவி வழங்கும் வகையிலும் அமைக்கப்படும்.