தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எதற்கும் தயாராகவே உள்ளோம்: இந்திய விமானப்படையின் புதிய தளபதி!

டெல்லி: பாகிஸ்தானிலிருந்து எவ்விதமான தாக்குதல் வந்தாலும், அதனை முறியடிக்க தயாராகவே உள்ளோம் என இந்திய விமானப்படையின் புதிய தளபதி தெரிவித்துள்ளார்.

ராகேஷ் குமார் சிங்

By

Published : Sep 30, 2019, 1:03 PM IST

இந்திய விமானப்படையின் 26ஆவது தளபதியாக ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதையடுத்து தேசிய போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஃபேல் விமானம் சிறந்த தொழில் நுட்பத்தால் உருவானது. இந்தியாவின் முக்கிய சக்தியாக நிச்சயம் ரஃபேல் விமானம் இருக்கும். பாகிஸ்தான் மற்றும் சீன நாடுகளோடு ஒப்பிட்டால் ரஃபேல் இந்தியாவுக்கு வேறு பரிமாணத்தில் இருக்கும் என்றார்.

இந்திய விமானப்படையின் புதிய தளபதி ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா

அதையடுத்து பாலகோட் தாக்குதல் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் பாகிஸ்தான் மீது எதிர்காலத்தில் தொடுக்கப்படுமா என கேட்டதற்கு, நாங்கள் அதற்கு எப்போதும் தயாராகவே இருந்தோம் என்றார். மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அனு ஆயுதம் பற்றிய பேச்சிற்கு, அவருடைய புரிதல் அதுவாக இருக்கலாம். எங்களுக்கு என ஒரு புரிதல் உள்ளது. எவ்வித தாக்குதலையும் எதிர்க்க தயாராகவே உள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

ABOUT THE AUTHOR

...view details