தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தோழியின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ஆண் நண்பர்

ஹைதராபாத்: தனியார் விடுதியில் தோழியின் கழுத்தை அறுத்து, தானும் தற்கொலைக்கு முயன்ற ஆண் நண்பர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தோழியின் கழுத்தை அறுத்துவிட்டு-தானும் தற்கொலைக்கு முயற்சி

By

Published : Jul 10, 2019, 10:49 AM IST

Updated : Jul 10, 2019, 12:58 PM IST

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் விடுதியில், ஆண் ஒருவர் தனது பெண் தோழியுடன் செவ்வாய்க்கிழமை தங்கியுள்ளார். அப்போது, அவர்கள் தங்கியிருந்த அறையில் பெண் அலறும் சத்தம் கேட்டது. இதன்பின், விடுதி வேலையாட்கள் உடனே அறைக்குள் சென்று பார்த்தபோது, அந்தப்பெண் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். பின், அந்த ஆணும் கத்தியால் தனது இடதுக்கை மணிக்கட்டை அறுக்க முயற்சித்துள்ளார்.

ஹைதராபாத்

இதை கண்ட விடுதி வேலையாட்கள், இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த பின், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விடுதிக்கு விரைந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.

இதில், விடுதியில் தங்கிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆண் நண்பர், தான் வைத்திருந்த கத்தியால் தனது தோழியின் கழுத்தை அறுத்துள்ளார்.

பின்பு அவரே தனது மணிக்கட்டை அறுக்க முயற்சித்திருக்கிறார். மேலும் அவர் மீது ஐ.பி.சி பிரிவு 307 கீழ் கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டுள்ளது. இவர், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கழுத்து அறுக்கப்பட்டப் பெண் தெலுங்கானா மாநிலம் மீர்பேட்டையைச் சேர்ந்தவர். இருவரும் ஹைதராபாத்தில் உள்ள ஒரு வங்கிப்பயிற்சி மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டனர். இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

Last Updated : Jul 10, 2019, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details