தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறுதி செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல்களைத் திருத்தக் கோரிய மத்திய அமைச்சர்!

டெல்லி: பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளுக்காக யு.ஜி.சி. வெளியிட்ட வழிகாட்டுதல்களைத் திருத்தக் கோரியுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்  யுஜிசி தேர்வு வழிகாட்டுதல்கள்  ugc exam guidelines  ugc announcements on last semester exam
ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்

By

Published : Jun 24, 2020, 5:47 PM IST

இந்தக் கல்வியாண்டுக்கான இறுதி மற்றும் இடைநிலை செமஸ்டர் தேர்வுகளுக்கு யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம்)வெளியிட்டிருந்த வழிகாட்டுதல்களை திருத்தி அமைக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கோரியிருந்தார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " யு.ஜி.சி. முன்னதாக வெளியிட்டிருந்த இறுதி செமஸ்டர்களுக்கான வழிகாட்டுதல்களைத் திருத்தியமைக்க வேண்டும் என அறிவுறுத்தினேன். மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு யு.ஜி.சி. தேர்வுக்கான வழிகாட்டுதல்களைத் திருத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக யு.ஜி.சி. வெளியிட்டிருந்த வழிகாட்டுதல்களில், ஜூலை முதல் வாரத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகள் நடைபெறும் என்றும், புதிய கல்வியாண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'பதிலளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்' - பிரியங்காவுக்கு எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details