தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்19 வைரஸ் தொற்றுக்கு எதிர்கொள்ளும் அரசின் அவசரக்கால திட்டம் என்ன?

ஹைதராபாத்: இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோவிட்19 வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக போராடுகிறது. மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி, 21 நாள்கள் பூட்டுதல் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில் நாட்டின் அவசரக் கால சுகாதார தயாரிப்பு திட்டங்கள் குறித்து அறிந்துக் கொள்வோம்.

By

Published : Apr 2, 2020, 5:50 PM IST

How India plans to respond during an emergency like COVID-19?  கோவிட்19 வைரஸ் தொற்றுக்கு எதிராக அரசின் அவசரக்கால திட்டம் என்ன?  COVID-19  அவசரக்கால திட்டம்  emergency
How India plans to respond during an emergency like COVID-19? கோவிட்19 வைரஸ் தொற்றுக்கு எதிராக அரசின் அவசரக்கால திட்டம் என்ன? COVID-19 அவசரக்கால திட்டம் emergency

மத்திய அரசு கோவிட்-19 போன்ற அவசரநிலையைச் சமாளிப்பதற்காக பல அமைச்சகங்களுடன் இணைந்து மூன்று வாரங்கள் நாடு தழுவிய பூட்டுதலுடன் தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தை தயார் செய்துள்ளது.

சுகாதாரத் திட்டம்

முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கவும், தனிமை வார்டுகள் மற்றும் அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளிட்டவைகள் அமைக்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

இது தவிர கரோனா வைரஸுக்கு எதிராகப் போராட இன்னும் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் அவசரகால தீர்வு மற்றும் சுகாதார அமைப்புகள் தயாரிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் சமூக உறுதிப்பாட்டுத் திட்டங்கள் என பல உள்ளன.

நோக்கம்

அதில் ஃபாஸ்ட் ட்ராக் கோவிட் -19 மறுமொழித் திட்டம் 1இன் ஒரு பகுதியாக, சுகாதார அமைப்புகள் தயாரிப்பு திட்டம் என்பது நான்கு ஆண்டுக் கால திட்டமாகும்.

அந்த வகையில் இந்தியாவில் அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்புகள் தயாரிப்பு திட்டம், கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலை தணிப்பதும், இந்தியாவில் பொது சுகாதார தயாரிப்புக்கான தேசிய அமைப்புகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதில் முதன்மையானது கோவிட்19 வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களை 48 மணி நேரத்தில் அடையாளம் காண்பது. மேலும் பருவக்கால மற்றும் தனிப்பட்ட தடுப்பு நடவடிக்கை ஆகியவைகளை முன்னெடுப்பது.

திட்டத்தின் பல்வேறு கூறுகள்

1) கோவிட்19 வைரஸ் தாக்குதலுக்கு உடனடி தீர்வு

2) தேசிய மற்றும் மாநில அளவிலான மருத்துவ வசதிகளை வலுப்படுத்துவது.

3) தொற்று நோய் ஆராய்ச்சியில் தேசிய நிறுவனங்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கான தளங்களை வலுப்படுத்துதல்.

4) சமூக ஈடுபாடு மற்றும் இடர் தொடர்பு

5) செயல்படுத்தல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு மதிப்பீடு.

6) அவசரக்கால பதில் கூறு

கோவிட்19 அவசரகால சுகாதார தயாரிப்பு திட்டம்

1) இந்தியாவில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்.சி.டி.சி) ஆகியவை இந்த அவசரக்கால சுகாதார தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இத்திட்டத்துக்கு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி நிதியளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

2) சுற்றுச்சூழல் மற்றும் சமூக தர நிலைகளுக்கு ஏற்ப இத்திட்டம் செயல்படுத்தப்படும் வகையில் பெறுநர் பொருள் நடவடிக்கைகள் மற்றும் செயல்களை செயல்படுத்துவார்.

3) இத்திட்டத்தில் தனிநபர் மற்றும் குழுக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வை இவர்கள் ஏற்படுத்துவார்கள். பள்ளி, இறை வழிபாட்டு தலங்கள், ஹோட்டல்கள், திருமண நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் சமூக இடைவெளி குறித்து இவர்கள் விழிப்புணர்வு நடத்துவார்கள்.

திறன் ஆதரவு:

இத்திட்ட நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி தலைப்புகள் இதில் அடங்கும்:

1) கோவிட்-19 தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு.

2) கோவிட்19 தொடர்பான ஆய்வக உயிரியல் பாதுகாப்பு வழிகாட்டுதல்.

3) மாதிரி சேகரிப்பு மற்றும் ஏற்றுமதி

4) கோவிட்-19 சோதனை, சிகிச்சை, தனிமைப்படுத்தல்.

5) கோவிட்-19 நோயாளிகளுக்கு நிலையான முன்னெச்சரிக்கைகள்

6) இடர் தொடர்பு மற்றும் சமூக ஈடுபாடு

7) தனிமைப்படுத்தப்பட்ட சிறந்த நடைமுறைகள்.

8) சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளும் இதில் அடங்கும்.

இவ்வாறு கோவிட்19 வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க உள்ளது.

இதையும் படிங்க: உலகை உலுக்கும் கரோனா: நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details