சான் வான்:கர்ப்பிணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பவை குறித்து புவேர்ட்டோ ரிக்கோவில் சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் நிக்கல், ஆர்சனிக், கோபால்ட் போன்ற உலோகங்களால் கர்ப்பிணிகளின் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது ஹார்மோன் உருவாதலில் பாதிப்பு ஏற்பட்டு வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலோகங்களின் வெளிபாடால், குறை பிரசவம், எடைக் குறைந்த குழந்தை, கர்ப்பிணிகளின் சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஆய்வாளர் சோரிமர் ரிவேரா நுனேஸ் கூறுகையில், "இந்த உலோகங்களால் பிற்காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கும் , நோய்வாய்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு அவர்களுக்கும், சிசுவுக்கும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். " என்றார்.