தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ஆயிரம் பணியிடங்களை நிரப்ப ஒப்புதல்!

டெல்லி: மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Home Ministry  CISF  VVIP security wing  new vacany posts in CISF  jobs in CISF  சிஐஎஸ்எஃப்.பில் ஆயிரம் காலியிடங்கள்  மத்திய அரசு வேலை  மத்திய பாதுகாப்பு படையில் ஆயிரம் காலியிடங்கள்
Home Ministry CISF VVIP security wing new vacany posts in CISF jobs in CISF சிஐஎஸ்எஃப்.பில் ஆயிரம் காலியிடங்கள் மத்திய அரசு வேலை மத்திய பாதுகாப்பு படையில் ஆயிரம் காலியிடங்கள்

By

Published : Mar 20, 2020, 10:34 PM IST

நாட்டின் முக்கியப் பகுதிகளில் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தப் படைப்பிரிவினர் நாட்டிலுள்ள 60 விமான நிலையங்கள், அணுமின் நிலையங்கள், மெட்ரோ ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் நிறுத்தப்பட்டிருப்பதையும் காணலாம்.

இந்நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் கூடுதலாக 1,018 பணியிடங்களை நிரப்ப உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதில் 899 இடங்களுக்கு உள்துறை அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்டது.

மேலும் 119 இடங்களுக்கு ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், நாட்டின் முக்கியப் பகுதிகளில் துணை ராணுவப் படையினர் (சிஐஎஸ்எஃப் உள்ளிட்ட) பாதுகாப்பு பணிகளில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தாஜ்மகாலில் குரங்குகளால் பயம் இல்லை - சிஐஎஸ்எஃப் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details