தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 25, 2020, 2:09 PM IST

ETV Bharat / bharat

இந்துத்துவா என்ற வார்த்தை 130 கோடி மக்களுக்கும் பொருந்தும் - மோகன் பாகவத்

மும்பை: இந்துத்துவா என்பது நமது அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு சொல். எனவே, இந்துத்துவா என்ற இந்த வார்த்தை 130 கோடி மக்களுக்கும் பொருந்தும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

Mohan Bhagwat
Mohan Bhagwat

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் இன்று தசரா விழா கொண்டாடப்பட்டது. கரோனா பரவல் காரணமாக முறையான சமூக இடைவெளியை பின்பற்றி நடத்தப்பட்ட இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.

அப்போது பேசிய மோகன் பாகவத், "இந்துஸ்தான் என்பது இந்து ராஷ்டிரம் என்று நாங்கள் கூறும்போது, ​​அது அரசியல் அல்லது அதிகார மையத்தை முன்வைத்து கூறப்படும் கருத்தும் இல்லை. சுயாட்சியின் மூலம்தான் இந்துத்துவா, நாட்டின் சுயசார்பைதான் நாங்கள் இந்துத்துவா என்று கூறுகிறோம்.

இந்துத்துவா என்பது நமது அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு சொல். எனவே, இந்துத்துவா என்ற இந்த வார்த்தை 130 கோடி மக்களுக்கும் பொருந்தும்.

'இந்து' என்பது குறிப்பிட்ட பிரிவு மக்களை குறிக்கும் பெயர் அல்ல. எண்ணற்ற தனித்துவமான அடையாளங்களை மதிக்கும் மற்றும் உள்ளடக்கிய ஒரு பொதுவான பெயர்.

இந்து கலாச்சாரம் பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. பல்வேறு நம்பிக்கை முறைகளை ஏற்றுக்கொள்வதும் ஆதரிப்பதும்தான் இந்து கலாச்சாரம். பொதுமக்களுக்கு இதை நாம் கற்பிக்க வேண்டும். அவ்வாறு நாம் பணியாற்றினால், எதிர்காலம் இந்தியாவுடையதாக இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க: "நீதி மறுக்கப்பட்டால் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் போராடுவேன்" - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details