தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும்விதமாக மதராசாவில் இந்து இணையர்களுக்குத் திருமணம்

பெங்களூரு: மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும்விதமாக கர்நாடக மாநிலம் பெலகாவில் மாவட்டத்தில் மதராசா சார்பாக 76 இந்து ஜோடிகளுக்குத் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

communial harmony
communial harmony

By

Published : Feb 24, 2020, 4:47 PM IST

காஷ்மீர், சி.ஏ.ஏ. உள்ளிட்ட விவகாரங்கள் நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்துவிடுமோ என்ற அச்ச உணர்வு மக்கள் மனதில் நிழலாடிவரும் இவ்வேளையில், மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும்விதமாக இந்து இணையர்கள், இஸ்லாமிய இணையர்கள் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு மதராசா சார்பாக திருமணம் செய்துவைக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள பலிலாஹொன்கல் நகரில் உள்ள மதராசா-இ-அன்வர் உல் உலோம் என்ற மதராசாவில்தான் இந்த ஆகச்சிறந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மதராசாவில் வைத்து இந்து இணையர்கள், இஸ்லாமிய இணையர்களுக்குத் திருமணம் நடத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

நிகழ்சியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள் புது மணத் தம்பதிகளை மனதார வாழ்த்தினர். ஒவ்வொரு திருமணத்துக்கும் 1000 ரூபாய் ரொக்கமும், குளிர்சாதனப் பெட்டி, தையல் இயந்திரம், தலையணை உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

இதையும் படிங்க : இந்திய சினிமாக்களை உலகம் முழுவதும் பார்க்கிறார்கள் - ட்ரம்ப் புகழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details