மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் 'இந்தியா சர்வதேச அறிவியல் விழா 2020' நிகழ்வில் காணொலி வாயிலாக பங்கேற்றார். விழாவில் சிறப்புரையாற்றிய ஹர்ஷ் வர்த்தன், நாட்டின் பழங்குடி மக்களின் மேம்பாட்டில் அரசு முக்கிய கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
பழங்குடி மக்கள் இயற்கையுடன் இணைந்து வாழும் தன்மை கொண்டவர்கள். அவர்களின் நம்பிக்கை, சடங்கு, பழக்கவழக்கம் இயற்கையுடன் ஒட்டியே உள்ளது. இது அவர்களுக்கு கூடுதலான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது என்றார். அதேவேளை, பழங்குடி இன மக்களிடம் ஊட்டச்சத்து குறைபாடும், மரபனு பாதிப்புகளும் அதிகம் கானப்படுவதாக அவர் கவலைத் தெரிவித்தார்.