புதுச்சேரியில் கரோனா தொற்றை கண்டறிய ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஜிப்மர், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் நடத்தப்படுகிறது. நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஆயிரத்து 200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் கரோனா பரிசோதனைக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், முடிவுகளை தெரிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
தற்போது புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆன்டிஜன் ரேபிட் பரிசோதனை தொடங்கியுள்ளது. இந்த பரிசோதனையில் அரைமணி நேரத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 100 பேரின் உமிழ்நீர் மாதிரிகளை சேமித்த பிறகு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனால் 3 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படும்.