தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 22, 2020, 12:47 PM IST

Updated : Dec 22, 2020, 2:52 PM IST

ETV Bharat / bharat

இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு - பிரதமர் மோடி பாராட்டு

நாட்டில் விலங்குகள் பாதுகாப்பான வாழ்விடத்தில் இருப்பதை, நாம் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

டெல்லி:இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 விழுக்காடு அதிகரித்துள்ளதாக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று (டிச.21) தெரிவித்திருந்தார். தற்போது நாட்டில் 12 ஆயிரத்து 852 சிறுத்தைகள் இருப்பதாகவும் அவர் தகவல் கூறினார்.

இந்நிலையில், நாடு முழுவதும் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "சிறந்த செய்தி! சிங்கங்கள், புலிகளைத் தொடர்ந்து தற்போது சிறுத்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு

விலங்குகளைப் பாதுகாப்பதில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு எனது பாராட்டுகள். இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு, விலங்குகள் பாதுகாப்பான வாழ்விடத்தில் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'உலக புலிகள் எண்ணிகையில் 70% விழுக்காடு இந்தியாவில் உள்ளது' - பிரகாஷ் ஜவடேகர்

Last Updated : Dec 22, 2020, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details