ஹரியானா ஐ.பி.எஸ். அலுவலர் பங்கஜ் நைன் (Pankaj Nain), தனது ட்விட்டர் பக்கத்தில், ஓடும் காரிலிருந்து குழந்தை விழும் காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலியில் சாலையின் வளைவில் கார் ஒன்று வேகமாகத் திரும்புகிறது. அப்போது, காரில் பயணித்த குழந்தை எதிர்பாராதவிதமாக சாலையில் கீழே விழுகிறது. சாலையில் பயணித்த அனைவரும்உடனடியாக சுதாரித்து வாகனங்களை நிறுத்தியதால், காயமின்றி குழந்தை காப்பாற்றப்பட்டது.
இதைப் பகிர்ந்த அலுவலர், பெற்றோர் குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது கண்டிப்பாக குழந்தைக்கான சிறப்பு லாக்-ஆன் (child lock) செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும், காரின் அனைத்து கதவுகளும் மூடியுள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். எல்லா குழந்தைகளும் இந்தக் குழந்தைபோல அதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டார்கள் எனப் தெரிவித்தார்.