டெல்லி:ஏழை நாடுகளில் நோய்த்தடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரும் வளரும் நாடுகள், தன்னார்வல அரசுகளை ஒருங்கிணைத்து தடுப்பூசி மற்றும் நோய் தடுப்புக்கான உலகளாவிய கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த கூட்டமைப்பு வாரியத்தின் உறுப்பினராக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் பெயர் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் படி, ஹர்ஷவர்தன் தென்கிழக்கு பகுதி பிராந்திய அலுவலகம் மற்றும் மேற்கு பசுபிக் பிராந்திய அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார். தற்போது மியான்மர் நாட்டைச் சேர்ந்த மிண்ட் ஹேவி இந்த பொறுப்பினை வகித்து வருகிறது.
2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை ஹர்ஷவர்தன் இதன் உறுப்பினராக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த வாரியத்தின் கூட்டமானது ஆண்டிற்கு இரு முறை அதாவது ஜூன் மாதம், நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறும். வாரியத்தின் உறுப்பினர்கள் இந்த கூட்டங்களில் நேரில் சென்று கலந்துக்கொள்வர்.
கரோனா காலம் போன்ற நோய் பரவல் காலங்களில் இந்த கூட்டமைப்பின் நாடுகள் இணைந்து செயல்பட்டு மக்களை பாதுகாப்பது, பசி பட்டினியினை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர். இந்த கூட்டமைப்பு சார்பில் இதுவரை ஏழை நாட்டுகளைச் சேர்ந்த 822 மில்லியன் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதேபோல் 14 மில்லியன் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. தற்போது இந்த வாரியத்தின் தலைவராக டாக்டர் நகோஷி ஒகான்ஜோ லியாலா செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க:கரோனா பரிசோதனை செய்யப்பட்ட 13 நிமிடங்களுக்குள் ரிசல்ட் - மும்பையில் புதிய வசதி