தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 25, 2020, 10:09 AM IST

Updated : Mar 25, 2020, 10:36 AM IST

ETV Bharat / bharat

கரோனா அச்சத்தால் மருத்துவர்கள் வீட்டை காலி செய்ய சொல்லும் அவலம்!

டெல்லி: கோவிட்-19 வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, மருத்துவர்களை வீடு காலி செய்ய சொல்லி வற்புறுத்துவது வேதனை அளிப்பதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

Harsh Vardhan
Harsh Vardhan

கோவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக, டெல்லி, நொய்டா, சென்னை ஆகிய நகரங்களில் வாடகை வீட்டில் வசிக்கும் மருத்துவர்களை வீட்டை காலி செய்ய வீட்டின் உரிமையாளர்கள் வற்புறுத்துவதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு இந்திய மருத்துவச் சங்கம் கடிதம் எழுதியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தக் இக்கட்டான சூழ்நிலையில் டெல்லி, நொய்டா, வாராங்கல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வாடகை வீட்டிலுள்ள மருத்துவ ஊழியர்களை வீட்டின் உரிமையாளர்கள் காலி செய்ய வற்புறுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் செயல் வேதனையளிக்கிறது. தயதுசெய்து பயப்படாதீர்கள். மருத்துவர்களை நீங்கள் துன்புறுத்தினால், அது தற்போதுள்ள மருத்துவ கட்டுமானத்தையே உலுக்கிவிடும்.

ஞாயிற்றுக்கிழமைதான் மருத்துவர்களின் சேவையை தேசமே பாராட்டியது. இச்சூழலில் மருத்துவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்தியாவில் தமிழ்நாட்டில் இதுவரை 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 9 பேர் உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா அறமற்ற அலட்சியத்தால் பாமரர்களைப் படுகுழியில் தள்ளாதீர்கள்

Last Updated : Mar 25, 2020, 10:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details