தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கைவினைப் பொருள்கள் கண்காட்சியைத் தொடங்கிவைத்த தலைமைச் செயலர் அஸ்வினி!

புதுச்சேரி: கைவினைப் பொருள்கள் விற்பனையை ஊக்குவிக்கும்விதமாகக் கடற்கரைச் சாலை காந்தி சிலை எதிரே நடைபெற்ற கைவினைப் பொருள்கள் கண்காட்சியைத் தலைமைச் செயலர் அஸ்வினி குமார் தொடங்கிவைத்தார்.

கைவினைப் பொருள்கள் கண்காட்சி
கைவினைப் பொருள்கள் கண்காட்சி

By

Published : Mar 7, 2020, 10:46 AM IST

மத்திய ஜவுளித் துறை, புதுச்சேரி கூட்டுறவுத் துறையும் இணைந்து கைவினைப் பொருள்கள் விற்பனையை ஊக்குவிக்கும்விதமாக அவர்களுக்கு வியாபார தளத்தை உருவாக்கி, அதன்மூலம் கைவினைத் தொழிலை மேம்படுத்திவருகிறது.

குஜராத், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கைவினைப் பொருள்கள் உற்பத்தியாளர்கள் பங்கேற்கும் கைவினைக் கண்காட்சியை இன்று புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை எதிரே உள்ள திடலில் மார்ச் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியை புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வின் குமார் தொடங்கிவைத்தார். பின்னர் அனைத்துக் கடைகளையும் பார்வையிட்ட அவர் பொருள்களின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.

இந்தக் கண்காட்சியில் எழுபதுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் கைத்தறிப் புடவைகள், மரச்சாமான்கள், மரத்தினால் செய்யப்பட்ட வரவேற்பு அலங்காரங்கள், மர பொம்மைகள், மண்பாண்டங்கள் உள்ளிட்ட கைவினைப் பொருள்கள் இடம்பெற்றன.

கைவினைப் பொருள்கள் கண்காட்சி

இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு கைவினைப் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: சர்வதேச பொருள் உற்பத்தி கண்காட்சி - அமைச்சர்கள் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details