இந்தியாவைச் சேர்ந்த குப்தா நிறுவனம், உலக நாடுகளில் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாகும். அந்தக் குடும்பத்தின் திருமண விழா உத்தரகாண்ட் மாநிலம், ஆலியில் கடந்த 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை அஜய் குப்தாவின் மகன் சூர்யகாந்த் திருமண விழாவும், 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அதுல் குப்தாவின் மகன் ஷாஷாங்க்கின் திருமண விழாவும் நடைபெற்றது.
ரூ.200 கோடி செலவில் நடைபெற்ற இந்த திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிந்தபோதே, திருமண ஏற்பாடுகள் சுற்றுச்சூழலை பாதிப்பதாக பொதுநல வழக்கொன்று தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்தத் திருமணத்தில் அம்மாநில முதலமைச்சர், யோகா குரு பாபா ராம்தேவ், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த திருமணத்திற்காக அப்பகுதியிலிருந்த அனைத்து ஹோட்டல்களும், விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டன. அலங்காரத்திற்குத் தேவையான மலர்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. சுமார் 200 கோடி செலவில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவுக்குப் பிறகு நான்காயிரம் கிலோ குப்பைகளை விட்டுச் சென்றுள்ளனர்.
நான்கு டன் குப்பைகளை சுத்தம் செய்ய வெறும் 20 பேரை மட்டும் நியமிக்கப்பட்டது நகராட்சி அலுவலர்களை விழிப்பிதுங்க வைத்துள்ளது.
குப்பையை சேகரிக்கும் துப்புரவு பணியாளர்கள்