அகமதாபாத்: ஜோதி நிறுவனத்தின் தலைவர் முதலமைச்சர் விஜய் ரூபாணியின் நண்பர் என்பதால், தவறுகளை குஜராத் ஆளும் கட்சி மறைக்க பார்க்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.
குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் அமைந்துள்ளது ஜோதி சிஎன்சி நிறுவனம். கோவிட்-19 காலங்களில் செயற்கை சுவாசக் கருவிகளைத் தயாரித்து, தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவந்தது.
மேலும் இவர்கள் தயாரித்த தமன் 1 என்ற கருவி கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டும் பிரத்யேகமாக சிகிச்சை அளிக்க உருவாக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் செயற்கைச் சுவாசக் கருவிகளின் குறைபாடு ஏற்பட்டபோது, ஜோதி நிறுவனம் 600க்கும் மேற்பட்ட கருவிகளை கொடுத்து உதவியது.
மதுபோதையில் தாக்குதல் - இளம்பெண் உயிரிழப்பு!
இவ்வேளையில் மஹாராஷ்டிரா, புதுச்சேரி முதலமைச்சர்களிடமிருந்து, இந்தக் கருவிக்கான ஆர்டர்கள் ஜோதி நிறுவனத்துக்குக் கிடைத்தது. இச்சூழலில் அகமதாபாத் மருத்துவமனையின் மருத்துவக் குழு ஒன்று, இந்தக் கருவிகள் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க உகந்தது அல்ல என்று குஜராத் மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியது.