காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் மத்திய முன்னாள்நிதியமைச்சருமான சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். பாஜகவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை அவர் ட்விட்டரில் விமர்சித்துவருகிறார்.
மாடுகள் மீதான பாஜகவின் காதல் காகிதத்தில் மட்டுமே உள்ளது - சிதம்பரம் விமர்சனம்
டெல்லி: உள்நாட்டு மாடுகளின் தொகையில் சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாஜகவின் மாடுகள் மீதான காதல் ஏட்டில் மட்டுமே உள்ளதாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இதனிடையே, வேலைவாய்ப்பின்மை குறித்து ட்விட்டரில் அவர், "என் சார்பாக என் குடும்பத்தினர் இதனை பதிவிடுகின்றனர். வேலைவாய்ப்பின்மை குறித்து நான் கேட்டபோது 50 விழுக்காட்டினர் அது தற்போது மோசமான நிலையில் உள்ளதாக கருத்து தெரிவித்தனர். வருங்காலத்தில் வேலைவாய்ப்பின்மை மிக மோசமான நிலையில் செல்வதற்கு நிறைய வாய்ப்புள்ளதாக 30 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இதன்மூலம் வேலைவாய்ப்பின்மை கடுமையான நிலையில் உள்ளது தெரியவருகிறது.
2012 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் உள்நாட்டு மாடுகளின் தொகை ஆறு விழுக்காடு குறைந்துள்ளது. இதன்மூலம் மாடுகள் மீதான பாஜகவின் காதல் ஏட்டில் மட்டுமே உள்ளது என்பது தெளிவாகிறது. அதன் கருவுற்றலை அதிகரிப்பதற்கான முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.