பெங்களூரு: முகக் கவசத்தின் விலையை மத்திய அரசு 47 விழுக்காடு அளவு குறைத்துள்ளதாகவும், மேலும் குறைக்க முயற்சிகள் எடுத்துவருவதாகவும் மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் சலமன்கா கவுடா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு முகக் கவசத்தின் விலையை 47 விழுக்காடு குறைத்துள்ளது!
ரசாயனம் மற்றும் உரங்களுக்கான மத்திய அமைச்சர் டி.வி. சலமன்கா கவுடா ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், நாங்கள் என்95 முகக் கவசத்தின் விலையை குறைக்க முனைகிறோம். ஏற்கனவே, 47 விழுக்காடு அளவிற்கு முகக் கவசத்தின் விலையை குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், “இந்தியாவில் உரத் தட்டுப்பாடு என்பதே கிடையாது. வல்லுநர்களின் அறிவுரையைக் கேட்டு 30 பூச்சிக் கொல்லிகளை தடைசெய்ய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலம், மத்திய அரசு இயற்கை விவசாயத்திற்கு ஊக்கம் அளிக்க விரும்புகிறது. அதேபோல விவசாயிகளும் இயற்கை முறையில் விவசாயத்தை மேற்கொண்டால் அது நன்மை பயக்கும்.
மேலும், நாட்டில் மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை, ஜன் அவுஷாதி கடைகளின் மூலம் மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.