கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால் அரசின் வருவாய் முற்றிலும் முடங்கியது. இதனிடையே, வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது.
அதன்படி பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி 2 ரூபாய், சாலை செஸ் வரி 8 ரூபாய் என மொத்தம் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் மீதான கலால் வரி 5 ரூபாய் சாலை செஸ் வரி 8 ரூபாய் என மொத்தம் 13 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் மீதான ஒட்டுமொத்த கலால் வரி ரூ. 32.98ஆகவும் டீசல் மீதான ஒட்டுமொத்த கலால் வரி ரூ. 31.83ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.