டெல்லி: 2018ஆம் ஆண்டு அக்டேபார் 27ஆம் தேதியுடன் அப்போதைய அமலக்காத்துறை இயக்குநராக இருந்த கர்னல் சிங் ஓய்வுப்பெற்றார். இதையடுத்து, 1984ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்) பிரிவைச் சேர்ந்த சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு, அதே ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி அன்று அமலக்காத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர், இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிப்பு
அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து, மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம்
தற்போது அவரது பதவிக் காலம் நவம்பர் 18ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பட்டாசு மூலம் செடி வளர்க்கலாம் - மத்தியப் பிரதேச சுய உதவிக்குழுவினரின் புது முயற்சி!