புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி எல்லைகளில் வரும் வாகனங்களுக்கு மருந்து தெளிக்கப்பட்டு சுகாதாரமாக அனுப்பப்பட்டு வருகின்றது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு பாதுகாப்பு
புதுச்சேரி: கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் பாதுகாப்பு கருதி முகக்கவசம், சானிட்டைசர் வழங்கினார்
போக்குவரத்து ஊழியர்களுக்கு பாதுகாப்பு
இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர், ஓட்டுநர் பாதுகாப்பு கருதி புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜஹான், அனைவருக்கும் முகக்கவசம், சானிட்டைசர் வழங்கினார். மேலும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.