தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

95 லட்சம் விவசாயிகள் பலன்பெறும் வகையில் பால்வளத் துறைக்கு ரூ.4,558 கோடி: மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி: 95 லட்சம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் ரூ.4,558 கோடியை பால்வளத் துறைக்கு வழங்க மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Javadekar
Javadekar

By

Published : Feb 19, 2020, 10:06 PM IST

அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பால்வளத் துறைக்கு ரூ.4,558 கோடியை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அரசின் இந்த முடிவு வெள்ளைப் புரட்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் கூறினார்.

மேலும், விவசாயிகளின் வட்டி மானியத்தை இரண்டு விழுக்காட்டிலிருந்து 2.5 விழுக்காடாக உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவையின் இந்த இரு முக்கிய முடிவுகளும் நாட்டிலுள்ள 95 லட்சம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: ரயிலில் மதத்தின் பெயரில் யாருக்கும் முன்பதிவு இல்லை - பியூஷ் கோயல்

ABOUT THE AUTHOR

...view details