தமிழ்நாடு

tamil nadu

'ஆளுநர் அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும், மீறக்கூடாது' - சீத்தாராம் யெச்சூரி

By

Published : Jan 17, 2020, 10:54 AM IST

திருவனந்தபுரம்: ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, மீறக்கூடாது என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

sy
sy

கேரள அரசு மற்றும் எதிர்க்கட்சி மீது அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி தரும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் கேரள மாநில அரசு அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறது எனக் குற்றம்சாட்டினார். முறையற்ற விதத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தங்களின் எதிர்ப்பை காட்டுவதாகத் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி தரும் விதத்தில் சீதாராம் யெச்சூரி இன்று கருத்து தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரின் நேரடி பிரதிநிதி எனவும், அவரின் பொறுப்பு அரசியலமைப்பை பாதுகாப்பதே தவிர, மீறுவது அல்ல' எனத் தெரிவித்தார்.

நாட்டின் ஆளுநருக்கு அரசியலமைப்புப் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விஷயம் எனத் தெரிவித்த யெச்சூரி, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கான அதிகாரத்தை ஆளுநர் தெரிந்து கொண்டு இவ்வாறு கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்றார் .

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த இஸ்லாமிய அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details