கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் சிக்கி உலக நாடுகள் தவித்து வருகின்றன. அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர். இதுவரை, ஒரு கோடியே 75 ஆயிரத்து 111 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தொற்றிலிருந்து 54 லட்சத்து 53 ஆயிரத்து 247 பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி
சீனாவில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
domestic transmission
கரோனா வைரஸ் நோயின் பிறப்பிடமான சீனாவில் புதிதாக 17 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக பிரேசில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவிலும் இதன் ருத்ரதாண்டவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.