தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாமியார் கொடுமையால் தற்கொலை நாடகமாடிய பெண் மீட்பு

பெங்களூரு: தற்கொலை செய்ததாக நாடகமாடிய பெண், ஐந்து நாட்களுக்குப் பின் பெங்களூரில் உயிருடன் மீட்டக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மாமியார் கொடுமையால் தற்கொலை நாடகம்!

By

Published : Jul 10, 2019, 12:22 PM IST

டெல்லியைச் சேர்ந்த கோமல் என்ற பெண் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரை காணவில்லை என இவரது தந்தை காசியாபாத் காவல்துறையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஜூலை 6ஆம் தேதி கோமாலின் கார் உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள ஹிந்தான் ஆற்றங்கரை பாலத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அதை செய்ததில், உள்ளே தான் தற்கொலை செய்யப்போவதாக எழுதப்பட்டிருந்த ஒரு கடிதத்தை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, ஹிந்தான் ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கருதி, நதியில் இறங்கி உடலை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். மூன்று நாட்கள் ஆகியும் உடல் கிடைக்கவில்லை என்பதால் தேடும் பணியை கைவிட்டனர்.

இருப்பினும் அவரது கைபேசி எண்ணிலிருந்து இருந்து அழைப்புகள் பகிரப்படுவதாக உளவுத்துறையிடம் இருந்து தகவல் கிடைத்தது. உடனே அந்த நம்பரை ட்ரேஸ் செய்ததில், அவர் பெங்களூரில் இருப்பதை அறிந்து அங்கு சென்ற காசியாபாத் காவல்துறையினர், கோமலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, மாமியாரின் கொடுமையால் தான் தற்கொலை செய்ததாக நாடகமாடியதாக வாக்கு மூலம் அளித்தார். தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட பெண், உயிருடன் மீட்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ABOUT THE AUTHOR

...view details