தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த ஜெர்மனி முதலீடு!

டெல்லி: தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த ஜெர்மனி 200 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

Modi

By

Published : Nov 2, 2019, 12:06 PM IST

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று மகாத்மா காந்தியின் நினைவகத்திற்கு சென்று மரியாதை செலுத்திய மெர்க்கல், தன் 12 அமைச்சர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான இந்தியக் குழுவுடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரு நாட்டைச் சேர்ந்த குறிப்பிட்ட சில அமைச்சர்கள் மட்டும் கலந்துகொண்டு ரகசிய ஆலோசனை நடத்தினர். இந்த ரகசிய கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட மெர்க்கல், "பசுமையான முறையில் நகரத்தைக் கட்டமைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளோம்.

தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த 200 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்யவுள்ளோம். டெல்லியில் நிலவும் காற்று மாசுவை பார்த்தால், டீசல் வாகனங்களுக்கு பதில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தலாம் என்ற கருத்து தோன்றுகிறது" என்றார்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் உங்கள் பாக்கெட்டிலா? - பாஜகவை கலாய்க்கும் சிவசேனா

ABOUT THE AUTHOR

...view details