ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் செயல்பட்டுவரும் தனியார் உணவக விடுதி ஒன்றில், ஜெர்மனியைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் தங்கியிருந்தார். அதைத்தொடர்ந்து நேற்றிரவு அவர் உணவகத்தின் மசாஜ் சென்டரில் மசாஜ் செய்துகொள்ளச் சென்றுள்ளார்.
ஜெர்மன் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உணவக ஊழியர்
ஜெய்ப்பூர்: பரத்பூர் தனியார் உணவக விடுதி ஒன்றில், ஜெர்மன் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
rajasthan-hotel
அப்போது மசாஜ் ஊழியர் ஒருவர், அவரிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதால் அங்கிருந்து கிளம்பிய அவர், பரத்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் உணவக ஊழியரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கூடத்தாயி கொலை வழக்கு: சிறையில் ஜாலி தற்கொலை முயற்சி