சட்டிஷ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங்டியோ, அம்பிகாபூரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ”கார்பேஜ் கஃபே” என்ற உணவகத்தை தொடங்கிவைத்துள்ளார். ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பையை உணவகத்தில் கொண்டுவந்து கொடுத்தால், இலவசமாக உணவு பெற்றுக்கொள்ளலாம் என்பதே இந்த உணவகத்தின் சிறப்பம்சமாகும்.
இந்தியாவை பிளாஸ்டிக் குப்பையில்லா நாடாக மாற்ற இதுபோன்ற வித்தியாசமான உணவகத்தை தொடங்கியுள்ளதாக இதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த உணவகத்தை திறந்துவைத்த பின்னர் பேசிய டி.எஸ். சிங்டியோ, ”இது ஒரு சிறந்த முயற்சியாகும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கும் முயற்சியில் இறங்கவேண்டும். இந்த உணவகத்தைப் பற்றி கேள்விப் பட்டவுடன், நான் என் வீட்டில் இருந்த குப்பைகளை சேகரிக்கத் தொடங்கிவிட்டேன்” எனத் தெரிவித்தார்.