மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று (அக்.16) 10 முக்கிய சாலைத் திட்டங்களை காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.
இதில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த திட்டங்களின் மதிப்பு 8 ஆயிரத்து 38 கோடி ரூபாயாகும். குறிப்பாக, ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் 2.7 கி.மீ ஆறு வழி மேம்பாலத் திட்டம் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டம் நாட்டின் பெருமைகளில் ஒன்று என கட்கரி தெரிவித்துள்ளார்.
2015ஆம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை ஐந்தே ஆண்டிற்குள் சிறப்பாக செய்து முடித்த பணியாளர்களுக்கு தனது பாராட்டுகளையும் அவர் தெரிவிதார். மேலும், 7 ஆயிரத்து 585 கோடி ரூபாய் மதிப்பில் 16 புதிய திட்டங்களுக்கு இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் கட்கரி.
இதையும் படிங்க:காற்று மாசுபாட்டிற்கு எதிராகக் களமிறங்கிய 9 வயது இந்தியப் போராளி!