கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கச்சா எண்ணெயின் தேவை குறைந்தது. இதனால் அவற்றின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் மார்ச் 16ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது ஊரடங்கு படிப்படியாக குறைந்துள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவருகிறது. இதனைக் காரணம் காட்டி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.
தொடர்ந்து 21 நாள்களாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரித்தது பொதுமக்களிடையே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில் 21 நாள்களுக்கு பிறகும், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் காணப்படுகிறது.