தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீர் விவகாரத்தில் எவ்வளவு செலவு? உள்துறை அமைச்சகம் பதில்

டெல்லி: மாநிலங்களவையில் எழுப்பப்படும் அதிகாரப்பூர்வ கேள்விகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம், அதனைத் தொடர்ந்து எடுத்த நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு செலவு செய்த தொகை உள்ளிட்ட கேள்விகளுக்கு உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உள்ளது.

From Balakot terror camps to situation in J-K, MHA prepares replies for RS session

By

Published : Nov 24, 2019, 11:05 PM IST

சென்ற வாரம் நடந்த மாநிலங்களவை கூட்டத்தில், காஷ்மீர், டெல்லி காற்று மாசு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில் வரும் வாரம் பாலகோட் பயங்கரவாத தாக்குதல், காஷ்மீரில் பண்டிட்களை மீள்குடியமர்த்துதல், கர்தார்ப்பூர் சாலை விவகாரம் மற்றும் அயோத்தி விவகாரம் உள்ளிட்ட 54 அதிகாரப்பூர்வ கேள்விகள் எழுப்பப்பட உள்ளன.

இதற்கான பதிலை உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. இந்த வாரம் நடைபெறும் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான காரணம், ஜம்மு-காஷ்மீருக்கு பயங்கரவாத ஊடுருவல், 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் மத்திய அரசால் ஏற்பட்ட செலவு, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உள்ளது.

கடந்த வாரம் ஜம்மு - காஷ்மீர் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட யூனியன் பிரதேசத்துடன் தொடர்புடைய பிற பிரச்சினைகள் குறித்து மொத்தம் ஒன்பது கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லி காற்று மாசுபாடு: நாடாளுமன்றத்தில் வைகோ உரை!

ABOUT THE AUTHOR

...view details