தமிழ்நாடு

tamil nadu

போலி ஆயுஷ்மான் பாரத் திட்ட வலைதளத்தை நடத்திய 4 பேர் கைது!

By

Published : Jun 1, 2020, 5:59 PM IST

டெல்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்குப் போலியான வலைதளம் நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

police arreasted four
police arreasted four

போலி ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்ட வலைதளத்தை நடத்தி, தேசியத் தலைநகரான டெல்லியில் வேலைவாய்ப்பு வழங்குவது என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றிய, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் (Ayushman Bharat Yojana), பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 லட்சம் ரூபாய் வரையில், ஏற்படும் மருத்துவச் செலவுகளை இந்திய அரசே ஏற்றுக்கொள்ளும்.

மேலும் ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது ஆகின்ற செலவுகள் மட்டுமல்லாது, அதற்குப் பின்னர் ஏற்படுகிற மருத்துவச் செலவுகளுக்கும் உரிய நிவாரணத்தொகை அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பதிவுக் கட்டணம் 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை என பொதுமக்களிடம் பணம் வசூலித்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறை தகவல் அளித்துள்ளது.

இவர்கள் நால்வரும் கிட்டத்தட்ட 1000 நபர்களை ஏமாற்றியுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப், நான்கு தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:16 துணை மின் நிலையங்களை திறந்துவைத்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details