தமிழ்நாடு

tamil nadu

அடல் சுரங்கப்பாதையில் ராணுவத்தின் கான்வாய் முதல் பயணம்!

By

Published : Oct 8, 2020, 3:27 PM IST

Updated : Oct 8, 2020, 3:33 PM IST

மணாலி: புதிதாக திறக்கப்பட்ட அடல் சுரங்கப்பாதை வழியாக இந்திய ராணுவதத்தின் கான்வாய் முதல் பயணம் மேற்கொண்டது.

atal
atal

உலகின் மிக நீளமான 'அடல்' சுரங்கப்பாதையை பிரதமர் மோடி கடந்த 3ஆம் தேதி ஹிமாச்சலில் திறந்து வைத்தார். இதனால் மணாலி மற்றும் லே இடையேயான பயண துாரம் 46 கி.மீ., குறைகிறது. இதனிடையே சுரங்கப்பாதை திறந்து வைக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக மூன்று விபத்துகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்திய ராணுவத்தின் கான்வாய் முதன்முதலாக அடல் சுரங்கப்பாதை வழியாக பயணம் செய்துள்ளது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேர பயண தூரம் இதனால் குறையும் எனக் கூறப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் அடல் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Last Updated : Oct 8, 2020, 3:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details