தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய அரசு அறிவிப்பால் பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு அதிகரிக்கும் - டி.எஸ். ஹூடா

ஹைதராபாத்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறித்து ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் பிலால் பட், ஓய்வுபெற்ற ராணுவ அலுவலர் டி.எஸ். ஹூடாவிடம் பிரத்யேக நேர்காணல் மேற்கொண்டார்.

http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/16-May-2020/7226447_665_7226447_1589638836088.png
http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/16-May-2020/7226447_665_7226447_1589638836088.png

By

Published : May 16, 2020, 9:38 PM IST

Updated : May 16, 2020, 10:06 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவரும் நிலையில் இன்று பாதுகாப்புத் துறை தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஓய்வுபெற்ற ராணுவ அலுவலர் டிஎஸ் ஹூடா ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு தனது பிரத்யேக கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசுகையில், பாதுகாப்பு துறையில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள கொள்கை முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் கொள்கைவடிவில் ஒருங்கிணைக்கப்பட்டு, முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் பாதுகாப்பு தளவாடங்கள் அதிகளவில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். அதேவேளை பாதுகாப்பு தளவாடங்களின் தரத்தில் நாம் எந்தவித சமரசமும் கொள்ளக்கூடாது. இந்தியாவில் முறையான தரத்தில் பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்கப்படும் வரை அதை வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்யப்பட வேண்டும்.

மத்திய நிதியமைச்சகம் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டை 49 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடாக அதிகரித்துள்ளது முக்கியமானது. இதன் மூலம் பாதுகாப்புத் துறை அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக வாய்ப்பை தரும்.

அரசு மேற்கொண்டுள்ள கொள்கை முடிவுகள் அனைத்தும் திடீரென உருவாக்கப்பட்டவை அல்ல. நீண்ட காலத் திட்டத்தின் வெளிப்பாடுதான் இவை. இந்த திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படும்பட்சதில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தி தன்னிறைவு பெற்று ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர முடியும் என டி.எஸ். ஹூடா தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி டி.எஸ். ஹூடாவிடம் பிரத்தியேக நேர்காணல்

இதையும் படிங்க:கைவிட்ட அரசு; நடை பயணமாய் புறப்பட்ட குடிபெயர் தொழிலாளர்கள் - நேரில் சந்தித்த ராகுல்

Last Updated : May 16, 2020, 10:06 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details