தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'டைகரும் எங்கள் குடும்பம் தான்' - கரோனா அச்சத்தால் வீட்டில் தனிமை!

மும்பை: வெளிமாநிலத்திலிருந்து வந்த காரணத்தினால் நாய் உள்பட நகை வியாபாரி குடும்பத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

By

Published : May 28, 2020, 4:04 PM IST

மும்பை
மும்பை

நாட்டில் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இருப்பினும் நான்காம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு ரயில், விமானம், தனி வாகனம் மூலம் திரும்பிவருகின்றனர்.

அந்த வகையில், கர்நாடாகவில் வசித்துவந்த நகை வியாபாரி ஷிண்டே, கரோனா அச்சம் காரணமாக சொந்த ஊரான மகாராஷ்டிராவிற்குத் திரும்ப முடிவுசெய்தார். அரசிடம் முறையான அனுமதி பெற்றுக்கொண்டு புறப்பட்ட ஷிண்டே குடும்பத்தினர் மகாராஷ்டிராவிற்குச் சென்றடைந்தனர். அரசு அறிவுரையின்படி வெளிமாநிலங்களிலிருந்து வருவோர் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதன்படி, ஷிண்டே குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டனர். இவருடன் பயணம்செய்த 'டைகர்' என அழைக்கப்படும் செல்லப்பிராணி நாயையும் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இவர்கள் நாள்தோறும் இரண்டு முறை குளிப்பாட்டி நாயை மிகவும் பத்திரமாகப் பராமரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:இயற்கை இரக்கமற்றது: தி பேர்ட்ஸ், லோக்கஸ்ட் அட்டாக், கார்ப்பரேட் எதிர்ப்பு..!

ABOUT THE AUTHOR

...view details