தமிழ்நாடு

tamil nadu

1 கோடி ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சிட்ட 5 பேர் கைது!

By

Published : Nov 25, 2019, 11:41 AM IST

சூரத்: ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய கள்ளநோட்டுகளை அச்சிட்ட ஐந்து பேரை குஜராத் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

fake

குஜராத் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பிரதீக் திலிபாய் சவாரியா என்பவரது வீட்டிலிருந்த நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மேலும் நான்கு பேருடன் இணைந்து இந்த கும்பல் கள்ளநோட்டுகள் அச்சடிப்பது தெரியவந்தது.

அதன் அடிப்படையில், சூரத் மாவட்டம் சா்தானாவைச் சோ்ந்த பிரவீன் சோப்டா, கலு சோப்டா மற்றும் மோகன் வாதுராடே ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ளநோட்டுகளை அச்சிட்ட கும்பல்

மேலும், கெடா மாவட்டம், அம்பவ் கிராமத்தில் உள்ள சுவாமிநாராயண் கோயில் ஆசிரமத்தில் காவல்துறையினா் சோதனை நடத்தியபோது, அங்கு மறைந்து வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலி கள்ளநோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய ராதா ராமன் சுவாமி என்ற சாமியாரை போலீசார் கைது செய்தனா்.

கள்ளநோட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து கட்டுக்கட்டாக இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனா். 1 கோடி ரூபாய் மதிப்புடைய கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கள்ளநோட்டு அச்சிட்ட குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று குஜராத் குற்றப்பிரிவு போலீசாா் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மதுரையில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டு பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details