தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பாதுகாப்பு படையில் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டேன்' - முன்னாள் ராணுவ பெண் அலுவலர் குற்றச்சாட்டு

பாதுகாப்பு படையில் பணியாற்றியபோது பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டேன் என முன்னாள் ராணுவ பெண் அலுவலர் கருணாஜித் கவுர் தெரிவித்துள்ளார்.

Karunajit Kaur

By

Published : Oct 24, 2019, 11:15 AM IST


இந்தோ - திபெத்திய எல்லையில் பாதுகாப்பு படையில் துணை கமாண்டன்ட் - துணை நீதிபதி அட்டர்னி ஜெனரல் பதவியிலிருந்து ராஜினாமா செய்த முன்னாள் பாதுகாப்பு படை அலுவலர் கருணாஜித் கவுர், பாதுகாப்புப் படைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் 'ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் படையில் சேர்ந்தேன். இந்த மாதம் 17ஆம் தேதி ராஜினாமா செய்த பிறகே நிம்மதி அடைகிறேன். வடமேற்கு எல்லையான சண்டிகரில் பணியாற்றிய போது ஒரு மாதத்திற்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கவுச்சர் 8ஆவது பட்டாலியனுக்கு அனுப்பப்பட்டேன். அப்போது அந்த பட்டாலியன் அலுவலர் தீபக் என்பவர் நான் உறங்கிக்கொண்டிருந்த போது என் அறைக்குள் நுழைந்து எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்' என சக ராணுவ அலுவலர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 75 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை!

ABOUT THE AUTHOR

...view details