தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: குலு மணாலியிலிருந்து சொந்த மாநிலத்திற்கே அழைத்து வரப்பட்ட பெண்!

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹிமாச்சல பிரதேச மாநிலம் குலு மணாலியில் இருந்து நான்கு வருடத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளார்.

mentally ill woman

By

Published : Oct 11, 2019, 8:25 PM IST

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷிலாம்மா. இவருக்கு 11 வயதிலேயே திருமணம் நடைபெற்றது. கணவரின் செயல்கள் நீண்டநாட்களாக பிடிக்காமலிருந்த சுஷிலாம்மா, வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு தவறுதலாக ஹிமாச்சல பிரதேச மாநிலம் குலு மணாலிக்கு சென்றுவிட்டார். அங்குள்ள அடர்ஷா மனநல மையத்தில் தங்கியுள்ளார். அந்த மையத்திற்கு பலரும் சிகிச்சைக்காக வருவர். ஆனால் சுஷிலாம்மா சிகிச்சைக்காக அவர்களிடம் செல்ல முடியவில்லை, காரணம் மொழிப் பிரச்னையால் செய்வதறியாது இருந்துள்ளார்.

mentally ill woman

ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு சிகிச்சைக்காக செல்வதுண்டு. அவர்களின் தாய் மொழியிலேயே அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். ஆனால் சுஷிலாம்மாவுக்கு தன் பிரச்னையை அவர்களிடம் சொல்லத் தெரியவில்லை.

ETV Bharat's efforts to bring back woman

இந்நிலையில் சுஷிலாம்மா தொடர்பாக, அவர் குலு மணாலியில் வசித்து வருகிறார், அவருக்கு மொழி தெரியாது, மனநலம் பாதிக்கப்பட்டவர், குலு மணாலியில் உள்ள மனநல மையத்தில் இருக்கிறார் என ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டது.

இந்த செய்தியின் மூலம் சுஷிலாம்மா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்று கண்டுபிடித்தனர். பின்னர், தவனகிரி மாவட்ட ஆணையர் சிவமூர்த்தி சுஷிலாம்மா தொடர்பான தகவல்களை தீவிரமாக விசாரித்து வந்தார். இறுதியில் சுஷிலாம்மாவை கர்நாடகத்திற்கு அழைத்து வந்தார். தற்போது சுஷிலாம்மா தவனகிரியில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:’பாரத் மாதா கி ஜே’ என்று கூறாத இந்தியர்கள் ’பாகிஸ்தானியர்கள்’ - பாஜக வேட்பாளர்

ABOUT THE AUTHOR

...view details