துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் பணி புரிந்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் பட் ஏப்ரல் 16ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
பெரும் முயற்சிக்குப்பின் கமலேஷ் பட்டின் உடல் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், கோவிட் -19 பெருந்தொற்று அச்சம் காரணமாக, இந்தியா கொண்டுவரப்பட்ட கமலேஷின் உடல் இந்தியாவிலிருந்து மீண்டும் துபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக ஈடிவி பாரத் அவரது குடும்பத்தினர், உறவினர்களின் கோரிக்கையை முன்னிறுத்தி செய்தி வெளியிட்டிருந்தது. உயரிழந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்தார், கோவிட்-19 பெருந்தொற்றால் அல்ல என்ற மருத்துவ ஆதாரத்தை ஈடிவி பாரத் வெளியுறவுத்துறையின் பார்வைக்கு முன் வைத்தது.